அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பணி பாதுகாப்பு வழங்க கோரி, நாளை, மாநிலம் முழுவதும் கறுப்பு "பேட்ஜ்' ஆர்ப்பாட்டம் நடத்த, பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.தமிழ்நாடு அனைத்து ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அவசரக்கூட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை. அத்துமீறி வரும் வெளி நபர்களால், ஆசிரியர்கள் பல்வேறு முறையில் தாக்கப்படுகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில், பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவர் ஒருவரால் குத்திக்கொலை, சேலம் அடுத்த காடையாம்பட்டியில், வெளி நபர்களால், பள்ளி மாணவர் கத்தியால் குத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், விளாரம்பட்டி அரசுப்பள்ளியில், ஒரு மாணவர், கோஷ்டி மோதலால் உயிரிழப்பு, கடந்தாண்டு, சென்னையில், உமாமகேஸ்வரி ஆசிரியை, மாணவரால் குத்திக்கொலை, திருவள்ளுவர் மாவட்டத்தில், மாணவரை கண்டித்த ஆசிரியர் ஒருவரை, ரவுடிகள் தாக்கியது. சென்னை, மதுரவாயில் அரசுப்பள்ளியில், மாணவர் ஒருவர் ஆசிரியை ஒருவரை தாக்கி காது கிழிந்தது.திருச்செங்கோடு அரசுப்பள்ளியில், மாணவர்கள் மது அருந்தியது. இதுபோன்று, மாணவர் சமுதாயம், வெளி நபர்களாலும், ஆசிரியர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆசிரியருக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்.மேற்கண்ட கோரிக்கையை நிறைவேற்றக் கோரி, நாளை (டிச.,10), மாநிலம் முழுவதும், அந்தந்த பள்ளியில் கறுப்பு "பேட்ஜ்' அணிந்து, கண்டனத்தை தெரிவிப்பதுடன், அன்றைய தினம் பள்ளி நேரம் முடிந்தவுடன், பள்ளியின் வாயில் முன்பாக வாயிற் கூட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.