WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 29, 2014

கவுரவ விரிவுரையாளர்களுக்குசம்பளம் வழங்க உத்தரவு

அரசுக்கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஐந்து மாத சம்பள நிலுவை தொகையை வழங்க கல்லுாரிக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 72 அரசுக் கலைக் கல்லுாரிகள் உள்ளன. விரிவுரையாளர் பற்றாக்குறையை தவிர்க்க ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். வகுப்புகள் நடக்கும் ஜூன் முதல் ஏப்ரல் வரை இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.இரண்டாவது 'ஷிப்ட்'டில் இவர்கள் வகுப்பு எடுக்கின்றனர்.

புதிதாக துவக்கப்பட்ட கல்லுாரிகளில் முதல்வரை தவிர மற்ற அனைவரும் கவுரவ விரிவுரையாளர்களே. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து நிலுவை சம்பள பட்டியலை கருவூலத்துக்கு அனுப்புமாறு கல்லுாரி முதல்வர்களுக்கு கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பட்டியலை முதல்வர்கள் அனுப்பி உள்ளனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.