WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, January 7, 2015

பாரீஸ் பத்திரிகை அலுவலகம மீது துப்பாக்கிச்சூடு : 12 பேர் பலி







                           



பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில்,வார பத்திரிகை அலுவலகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் சார்லி ஹெப்ட்டோ என்ற வாரந்திர பத்திரிகையின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரில் வந்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பியோடினர்.அக்காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 போலீசார் உள்பட 10 பேர் பலியாகினதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயமடைந்தனர்.தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார் என்பதும் பயங்கரவாதிகளின் தாக்குதலா என்பது குறி்த்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கு முன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இதே போன்று சம்பவம் நடந்ததாகவும் போலீசில் தரப்பில் கூறப்படுகிறது.சம்பவ அறிந்த பிரான்ஸ் அதிபர் தனது பாதுகாப்பு உயரதிகாரிகளின் கூட்டத்தினை கூட்டி உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசித்து வருகிறார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.