WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, January 22, 2015

கிராம நிர்வாக அலுவலர் பதவி: ஜனவரி 27 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

கிராம நிர்வாக அலுவலர்களைத் தேர்வு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்புப்
பணிகள் வரும் 27-ஆம் தேதி தொடங்கும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) தெரிவித்தது.

இதுகுறித்து, தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 2013-14-ஆம் ஆண்டுகளுக்கான கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 14-ல் நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 15-ல் வெளியிடப்பட்டது.

எழுத்துத் தேர்வில் தாற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு முறையிலான ஒதுக்கீடு ஆகியன வரும் 27 முதல் பிப்ரவரி 12 வரை நடைபெறும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தாற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.