WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, January 1, 2015

டி.ஆர்.பி., போட்டித்தேர்வுகல்வி அதிகாரிகள் ஆலோசனை

மதுரையில் முதுநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம்
(டி.ஆர்.பி.,) நடத்தும் போட்டித்தேர்வுகள் குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
டி.ஆர்.பி., இணை இயக்குனர் உமா தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி (மதுரை), லோகநாதன் (மேலுார்), ராமகிருஷ்ணன் (உசிலம்பட்டி), மாவட்ட தொடக்க கல்வி
அலுவலர் சுப்பிரமணியன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.ஜன.,10ல் நடக்கும் இத்தேர்வை மதுரையில் 8326 பேர் எழுதுகின்றனர். இதற்காக 19 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் தேர்வு நடத்தும் முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டம் குறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்தேர்வில் முதன்முறையாக தேர்வு எழுதுபவர்களுக்கு வழங்கப்படும் தேர்வு எண், பெயர் உட்பட விவரங்கள் குறிக்கும் கம்ப்யூட்டர் ஒ.எம்.ஆர்., சீட்டில் (விடைகள் இதில் தான் குறிப்பிட வேண்டும்) தேர்வர்களின் போட்டோ இடம் பெற்றுள்ளது. 'ஹால் டிக்கெட்'டில் இடம் பெற்ற போட்டோவும், ஒ.எம்.ஆர்., சீட்டின் போட்டோக்களையும் ஒப்பிட்டு பார்க்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 8326 பேரின் ஒ.எம்.ஆர்., சீட்டுகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்
பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.