டிஆர்பி தேர்வில் முறைகேட்டை தடுக்க முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய ஓஎம்ஆர் விடைத்தாள் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. தேர்வர்கள் கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஜனவரி 10ம் தேதி எழுத்து தேர்வு நடக்க உள்ளது. மொத்தம் 1,807 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், அதிகபட்சமாக தமிழாசிரியர் பணிக்கு 277 பேரும், கணித ஆசிரியர் பணிக்கு 222 பேரும், ஆங்கில ஆசிரியர் பணிக்கு 209 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு தலா 189 பேர் தேர்வு செய்யப்படுவர். வரலாறு பாடத்திற்கு 198 பேரும், வணிகவியல் பாடத்திற்கு 135 பேரும், பொருளாதாரத்திற்கு 177 பேரும், உயிரியல் பாடத்திற்கு 89 பேரும், தாவரவியல் பாடத்திற்கு 95 பேரும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு 27 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சுமார் 1 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத உள்ள னர். தேர்வுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலை யில் ஹால் டிக்கெட் டிஆர்பி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதை தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து வருகின்றனர். முறைகேட்டைத் தடுக்க இந்த ஆண்டு முதல் முறையாக ஓஎம்ஆர் விடைத்தாள் ஷீட்டிலும் தேர்வர்களின் புகைப்படம் இடம் பெறுகிறது.
தேர்வு எழுத வருபவர்கள் நீலம் அல்லது கறுப்பு நிற பால்பாயின்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், கால்குலேட்டர், செல்போன் உள்ளிட்ட வேறு எந்த பொருட்களும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. காலை 9.30 மணிக்குள் தேர்வுக் கூடத்திற்கு வரவேண்டும். முதல் அரை மணி நேரம் ஓஎம்ஆர் ஷீட் மற்றும் வருகை பதிவேட் டில் கையெழுத்திட்டு நிர ப்ப அவகாசம் தரப்படும்.
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெறும். காலை 10.15 மணிக்குப் பின்னர் தேர்வுக் கூடத்திற்கு வருபவர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். விடைத்தாளுடன் டூப்ளிகேட் (கார் பன்) ஷீட் இணைத்தே வழங்கப்படும்.
தேர்வு எழுதிய பின்னர் தேர்வர்கள் விடைகளை குறித்த கார்பன் ஷீட்டை எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைகேட்டை தடுக்க ஏற்பாடு
கண்காணிக்க குழு அமைப்பு
தேர்வை குழப்பமின்றி நடத்துவது குறித்து அனைத்து மாவட்டங்களிலும் டிஆர்பி அதிகாரிகள் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் தேர்வை நடத்துவது தொடர்பாக முன்னேற்பாடு கூட்டங்களை நடத்தி கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நியமிப்பது மற்றும் அவர்கள் வழங்கவேண்டிய அறிவுரைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
நெல்லை மாவட்டத்தில் டிஆர்பி இணை இயக்குனர் அமுதவல்லி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கஸ்தூரிபாய் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.