WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 20, 2015

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு விதிகளில் திருத்தம்

பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெறுவதற்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-2, உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ஆகியப் பதவி உயர்வுக்காக சார்நிலை அலுவலர்களுக்கானக் கணக்குத் தேர்வு பாகம்-1-இல் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருந்தது. இந்த விதியை திருத்தம் செய்து தமிழக அரசு அண்மையில் கடிதம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, உடற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காக இந்தத் தேர்வை இனி எழுத வேண்டியதில்லை.

இந்த நடைமுறையை அகற்றியதற்காக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.