WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, January 31, 2015

பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தினமும் நாளிதழ்!

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தினமும் நாளிதழ் வாங்குவதன் அவசியம் குறித்து தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு பள்ளியிலும் காலையில் அன்றாட தமிழ் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் வாசிப்பு பின்பற்றப்படுகிறது. நூலகத்தில் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் உத்தரவு உள்ளது. பத்திரிகை வாங்குவதற்கென பள்ளி மானிய நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை செலவிடவும் அனுமதி உண்டு.

இந்நிலையில் காலையில் செய்தி வாசிப்பது பெரும்பாலான பள்ளிகளில் கடைபிடிப்பது இல்லை. கிராமப்புற பள்ளிகளை காரணம் காட்டி,சில தலைமை ஆசிரியர்கள் தங்களது வீடுகளில் காலையில் நாளிதழ்களை வாங்குவதோடு, அவற்றை பள்ளிக்கு எடுத்துச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

கல்வித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "தலைமை ஆசிரியர்கள் விரும்பினால் பிற செலவினை குறைத்து நாளிதழ்களை வாங்கி, வாசிப்புத்திறனை மேம்படுத்தலாம். படிக்க,படிக்க தான் கிராமப்புற மாணவர்களுக்கு வாசிப்பு திறன் அதிகரிக்கும். 9ம் வகுப்பு மாணவருக்கு கூட, வாசிப்பு திறன் குறைபாடு இருப்பதை அறிய முடிகிறது. நாளிதழ் வாங்காத பள்ளிகள் வாங்க வலியுறுத்தப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.