WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, January 21, 2015

வி.ஏ.ஓ. பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.

                                 

சென்னை: கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்ட வி.ஏ.ஓ. தேர்வு முடிவுகளின்படி, தேர்ச்சி பெற்றோர்களுக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து TNPSC வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி: எழுத்துத் தேர்வில் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, ஜனவரி 27 முதல் பிப்ரவரி 12ம் தேதி வரை, சென்னை TNPSC தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

மேற்கண்டவற்றுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள்,www.tnpsc.gov.in என்ற இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், கலந்தாய்விற்கான தேதி மற்றும் நேரம் ஆகிய விபரங்கள், விரைவு தபால் மூலமாக, ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனியாக அனுப்பப்பட்டுள்ளன.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆகியவற்றில் கலந்துகொள்வோர் அனைவருக்கும் பணி நியமனம் என்ற உத்தரவாதம் கிடையாது. காலிப் பணியிடங்களின் அடிப்படையிலேயே பணி நியமனம் நிகழும்.

இந்த வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு, வேறு மறுவாய்ப்புகள் வழங்கப்படமாட்டாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.tnpsc.gov.in

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.