ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சான்று பதிவிறக்கம் செய்யாதவர்களுக்கு, வரும், 19ம் தேதி முதல் ஃபிப்ரவரி, 14ம் தேதி வரை, சி.இ.ஓ., அலுவலகத்தில் வினியோகிக்கப்பட உள்ளது. இதுகுறித்து, சி.இ.ஓ., மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால், 2012-13ம் ஆண்டில் நடத்தப்பட்ட, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றுகள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இதுவரை சான்றுகளைப் பதிவிறக்கம் செய்யாதவர்கள், வரும், 19ம் தேதி முதல், ஃபிப்ரவரி, 14ம் தேதி வரை, சி.இ.ஓ., அலுவலகத்தில் உரிய அடையாளச் சான்றுகளைச் சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.