WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, February 14, 2015

குரூப் - 1 முதல்நிலை தேர்வு: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு

குரூப் - 1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள், சான்றிதழ்களின் நகல்களை அனுப்பி வைக்கும்படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

குரூப் - 1 பிரிவில், 79 பதவி களுக்கான முதல் நிலை தேர்வை, 2014 ஜூலை, 20ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற, 4,389 பேருக்கும், தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டிய சான்றிதழ் விவரம், தேர்வுக்கட்டணம் குறித்த குறிப்பாணை, விரைவு தபால் மூலம், அனுப்பப்பட்டு உள்ளது. அந்த குறிப்பாணை, தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு உள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை பதிவு செய்து, குறிப்பாணை மற்றும் அதன் இணைப்புகளை பதிவிறக்கம் செய்யலாம். குறிப்பாணையில் கேட்கப்பட்டு உள்ள சான்று இடப்பட்ட சான்றிதழ்களின் நகலை, பிப்., 17 அல்லது அதற்கு முன், தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.