WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, February 14, 2015

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி விண்ணப்பதாரர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வேண்டுகோள்

குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள சான்றிதழ் நகலை வரும் 17ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜூலை 20ம் தேதி குரூப் 1 பணியில் அடங்கிய 79 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்து தேர்வை நடத்தியது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்ற 4,389 விண்ணப்பதாரருக்கும் தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டிய சான்றிதழ்களின் விவரம் மற்றும் தேர்வு கட்டணம் தொடர்பான குறிப்பாணை, விரைவு அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு விட்டது.

மேலும் அக்குறிப்பாணை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வு பதிவு எண்ணை உள்ளீடு செய்து குறிப்பாணை மற்றும் அதன் இணைப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். குறிப்பாணையில் கேட்கப்பட்டுள்ள சான்றிடப்பட்ட சான்றிதழ்களின் நகலை வரும் 17ம் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ தேர்வாணைய அலுவலகத்திற்கு வந்து சேரும்படி அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.