WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 4, 2015

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 24க்குள் முடிக்க உத்தரவு.

பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகளை பிப். 6ல் துவங்கி, 24க்குள் முடிக்க அரசு
தேர்வுகள் துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5ல் துவங்குகிறது. அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் மாவட்டங்களில், இம்மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வை பிப்.,6ல் துவங்கி 24ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட கல்வித்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "அறிவியல், புவியியல், புள்ளியியல், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு நடத்த முதன்மை கல்வி அலுவலகங்கள் மூலம் மாவட்ட வாரியாக பள்ளிகளை இருபிரிவாக பிரித்து வெவ்வேறு தேதிகளில் கால அட்டவணை தயாரித்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வக வசதி இல்லாத பள்ளிகளின் மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்பதற்கான பள்ளிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. பணிகள் அனைத்தையும் முடித்து, மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களை பிப்.,28க்குள் சென்னை இயக்குனரகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது,” என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.