WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, February 2, 2015

ரயில்வே குரூப் - சி பணிக்கு இனி கல்வி தகுதி பிளஸ் 2

ரயில்வே துறையில், 14 லட்சம் பேர் பணி புரிகின்றனர். இதில், குரூப் - சி, குரூப் - டி பணிகளுக்கான ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை மேற்கொள்ள, சென்னை ரயில்வே தேர்வு வாரியம் உட்பட நாடு முழுவதும், 21 வாரியங்கள் உள்ளன.

இதுவரை, எழுத்தர், டிக்கெட் கலெக்டர், கமர்சியல் எழுத்தர், கணக்கு எழுத்தர் உள்ளிட்ட குரூப் - சி பணிகளுக்கு, குறைந்தபட்ச கல்வித் தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாக இருந்தது. தற்போது, பிளஸ் 2 என, கல்வித் தகுதி உயர்த்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னை ரயில்வே வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கல்வித் தகுதியை உயர்த்தி, ரயில்வே வாரியத்திடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. இந்த உத்தரவு, புதிய பணி நியமனங்களுக்கு பின்பற்றப்படும். கடந்த, டிசம்பர், 27ம் தேதிக்கு முன் வெளியான குரூப் - சி பணி நியமன அறிவிப்புகளுக்கு, இந்த உத்தரவு பொருந்தாது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.