WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, February 15, 2015

202 சிறப்பாசிரியர்களை நியமிக்க அரசு நடவடிக்கை

தமிழகத்தில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கற்பிக்க, இடை நிலை
கல்வித்திட்டத்தின் கீழ், 202 சிறப்பாசிரியர் பணியிடம் பள்ளி கல்வித்துறையில், புதிதாக தோற்றுவிக்கப்படுகிறது.

அரசு உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சில குறிப்பிட்ட வகுப்புகள், சிறப்பாசிரியர் மூலம், தனியாக நடத்தப்படுகின்றன.கடந்த ஆண்டு அக்., 17ம் தேதி, சட்டசபையில் பள்ளிகல்வி மானிய கோரிக்கையில்,' இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ், 5.35 கோடி ரூபாயில், 202 சிறப்பாசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இவை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்படும்' என, அமைச்சர் வீரமணி அறிவித்தார்.இதையடுத்து, தமிழக பள்ளிகளில், 2,178 மாற்றுத் திறனாளி மாணவர்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இவர்களுக்கு கற்பிக்க, 202 சிறப்பாசிரியர் பணியிடங்களை கூடுதலாக உருவாக்க, பள்ளிக்கல்வி இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.இப்பணியிடங்கள், டி.ஆர்.பி.,யால், போட்டி தேர்வு வாயிலாக, நிரப்பவும், அனைவருக்கும் இடைநிலை கல்விதிட்டத்தில், மத்திய அரசின் நிதியில் இருந்து ஊதியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.