WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, February 21, 2015

அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிக்கை : எஸ்.எஸ்.எல்.சி. செய்முறை தேர்வு 24-ந் தேதி தொடங்குகிறது


மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பு 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் 19-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கி ஏப்ரல் 10-ந் தேதி முடிவடைகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் பாடத்தில் மட்டும் செய்முறை தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த வருடம் அறிவியல் எழுத்து தேர்வுக்கு வழக்கம் போல 75 மதிப்பெண்களும், அக மதிப்பீட்டுக்கு 5 மதிப்பெண்ணும் ஆகும். செய்முறை தேர்வுக்கு 20 மதிப்பெண்கள்.

அறிவியல் செய்முறை தேர்வு 24-ந் தேதி முதல் மார்ச் மாதம் 4-ந் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குனர் கு.தேவராஜன் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், செய்முறை தேர்வு மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மார்ச் 9-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும். பிறகு மார்ச் 11-ந் தேதி முதல் 14-ந் தேதிக்குள் தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள் செய்முறை தேர்வில் எந்த வித ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடக்கூடாது. தலைமை ஆசிரியர்கள் செய்முறை தேர்வுக்கு தேவையானவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.