WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 26, 2015

எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 மாணவர்கள் உயர்கல்வியில் சேர வசதியாக உடனடி தற்காலிக சான்றிதழ்

எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு தேர்வு முடிவு வந்ததும் உயர் கல்வியில் சேர வசதியாக கல்லூரிகளில் வழங்கப்படுபவது போல் உடனடி தற்காலிக சான்றிதழ் (புரொவிஷனல் சர்டிபிகேட்) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டிற் கான பிளஸ்2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 5ம் தேதியும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 19ம் தேதி யும் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு விடைத்தாள்களை ரயிலில் கொண்டு சென்றபோது காணாமல் போனது. இந்த முறை அவ்வாறு நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், காற்றோட்டம், போதிய வெளி ச்சம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் முன்னதாகவே மாவட்ட கல்வி அலுவலர்கள் மற் றும் சிறப்பு கண்காணிப்பாளர்கள் பார்வையிட்டு உறுதி செய்து கொள்ள வே ண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மறுமதிப்பீட்டிற்கு சுமார் 87 ஆயிரம் பேரும், மறுகூட்டலுக்கு 4 ஆயிரம் பேரும் விண்ணப்பித்திருந்தனர். இந்த எண்ணிக்கை யை குறைக்க மதிப்பீட்டு பணியை மிக வும் கவனமாக மேற்கொள்ளுமாறு ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ்2 தேர்வு முடிவு கள் வெளியான உடனேயே மாணவர்களுக்கு மதிப் பெண் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. இதனால் உயர்கல்வியில் மாணவர் கள் சேர முடியாமல் பாதி ப்பு ஏற்படுகிறது. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் சான்றிதழ் களை மத்திய மற்றும் வெளிமாநில கல்வி நிறுவனங்கள் ஏற்க மறுக்கின்றன.
இதை தவிர்க்க தேர்வு முடிவுகள் வந்த இரண்டாம் நாளன்றே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழ ங்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கல்லூரிகளில் பட்டம் வழங்குவதற்கு முன்னதாக வழங்கப் படும் புரொவிஷனல் சான்று போல் இந்த தற் காலிக சான்றிதழ் வழங்கப் படும். இதை வைத்து உயர்கல்விக்கு விண்ணப்பிக்க முடியும். கல்வித்துறையின் இந்த புதிய முடிவை ஆசிரியர்கள், பெற்றோர் மற் றும் மாணவர்கள் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.