பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் மற்றும் ஏப்ரல்
மாதம்
நடைபெற உள்ளது. இத்தேர்வுகள் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில், தலைமைச்
செயலர் ஞானதேசிகன் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், கல்வித்
துறை செயலர், இயக்குனர், மின் துறை செயலர், போக்குவரத்து துறை செயலர்
மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், தேர்வு மையங்கள் மற்றும் வினாத்தாள் இருப்பு உள்ள
மையங்களுக்கு, போதுமான பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது. தேர்வை
கண்காணிக்க, பறக்கும் படை அமைப்பது; தேர்வு மையங்களுக்கு தடையின்றி,
மின்சாரம் தருவது; ஜெனரேட்டரை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்தும்
ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தேர்வு மையங்களுக்கு, போதிய பஸ் வசதி ஏற்படுத்துவது, அனைத்து
பஸ்களும், தேர்வு மையங்கள் முன் நின்று செல்ல, ஏற்பாடு செய்யவும் முடிவு
செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.