WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 26, 2015

வானொலியில் அறிவிப்பாளர் பணி: தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி வானொலி நிலையத்தின் முதல் அலைவரிசை மற்றும் வானவில்
பண்பலையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க பகுதி நேர அறிவிப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பகுதி நேர அறிவிப்பாளர் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.  பண்பலை ஒலிபரப்புக்கு 25 வயதிலிருந்து 35 வயதுக்குள்பட்டராகவும், முதல் அலைவரிசைக்கு 25 வயதிலிருந்து 50 வயதுக்குள்பட்டரவாகவும் இருக்க வேண்டும். இலக்கியம், உலக நடப்பில்  நாட்டம் உள்ளராகவும், வானொலிக்கு ஏற்ற குரல் வளமும், உச்சரிப்பும் உடையவராக இருக்க வேண்டும். முறையான விண்ணப்பம் படிவம் பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய விவரத்தை எழுதி அனுப்பவேண்டும். குரல் தேர்வுக்கும், தேர்வில் வென்றால் வாணி  சான்றிதழுக்கான பயிற்சிக் கட்டணத்தை செலுத்த வேண்டும். குரல் தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் பெறுவதற்கான தன் விவரக் கடிதம் திருச்சி வானொலி நிலையத்துக்கு இம்மாதம் 28-ம் தேதிக்குள் வந்து சேர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.