WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 17, 2015

மோட்டார் வாகன ஆய்வாளர் பணி தேர்வு முடிவு வெளியீடு

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றோருக்கு, மார்ச், 5ம் தேதி நேர்காணல் தேர்வு நடக்கும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:தமிழ்நாடு போக்குவரத்து சார்நிலைப் பணியில், மோட்டார் வாகன ஆய்வாளர், 2ம் நிலை பதவிக்கு, 17 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, 2012 ஆகஸ்ட் 26ம் தேதி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற 1,686 விண்ணப்பதாரர்களில், 42 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான நேர்காணல் தேர்வு, தேர்வாணைய அலுவலகத்தில் மார்ச், 5ம் தேதி நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டோரின் பதிவெண்கள்,http:/www.tnpsc.gov.in/results.html என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.