தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் பணியில் காலியாக உள்ள 117 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த 15ம் தேதி நடந்தது. சென்னை, மதுரை, கோவை மாவட்டத்தில் 15 மையங்களில் நடந்த இத்தேர்வை சுமார் 4,000 மாணவிகள் எழுதினர். இந்நிலையில், குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலர் தேர்வுக்கான விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpscexams.net பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்சர் கீயில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் வருகிற 26ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.