WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, February 23, 2015

'சி - டெட்' தேர்வு: ஆசிரியர்கள் பங்கேற்பு.

மத்திய அரசு பள்ளிகளில், ஆசிரியராக சேர நடத்தப்படும் தகுதித் தேர்வான, 'சி
- டெட்' தேர்வு நேற்று நடந்தது. தமிழகத்தில், பல ஆயிரம் ஆசிரியர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர்; யூனியன் பிரதேச பள்ளிகளில், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியராக பணியாற்ற, 'சி - டெட்' எனப்படும், மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும்.இத்தேர்வை, பிப்ரவரி மற்றும் செப்டம்பர் என, ஆண்டுக்கு இருமுறை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ., நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான, முதல் தேர்வு அறிவிப்பு, டிசம்பரில் வெளியானது. நாடு முழுவதும், ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., படித்த லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இதில், முதல் தாள், இடைநிலை ஆசிரியர்களுக்கும்; இரண்டாம் தாள், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. இரண்டு பயிற்சிகளையும் முடித்தவர்கள், இரண்டு தாள் தேர்வுகளையும் எழுதலாம்.நேற்று, நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்பட்ட, 988 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.சென்னையில், ஆறு; மதுரை, கோவை உட்பட, தமிழகத்தில், 10க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை, 9:30 முதல், 12:00 மணி வரை, முதல் தாள்; பிற்பகல், 2:00 முதல், 4:30 மணி வரை, இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும், 3,000 பேர் தேர்வு எழுதினர். இத்தேர்வின் உத்தேச விடை பட்டியல், அடுத்த வாரம் வெளியாகும். இறுதி முடிவுகள், ஏப்., 1ம் தேதி வெளியிடப்படும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.