WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, February 7, 2015

"வாசிப்புத்திறன் மேம்பட, வீட்டிலும் பெற்றோர்கள் பயிற்சியளிக்க வேண்டும்" ?

வத்திராயிருப்பு: மாணவர்களுக்கு வகுப்பில் நடத்தப்படும் பாடங்கள் தவிர, அவர்களின் வாசிப்பு திறன் மேம்பட அவர்களுக்கு, வீட்டிலும் பெற்றோர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என அறிவுரை கூறப்பட்டது.

வத்திராயிருப்பு இந்து தொடக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டம் நடந்தது. பெற்றோர்களின் குறைகள் கேட்கப்பட்டது. பின்னர் அவர்களுடன் கலந்துரையாடல் நடந்தது. இதில், "பெற்றோர்கள் தாங்கள் குழந்தைகளின் வாசிப்பு திறன் மேம்பட வீட்டில் தினமும் தமிழ், ஆங்கிலம் வாசிக்க பயிற்சியளிக்க வேண்டும்.

கணக்குப்பாடத்தின் முக்கிய பிரிவான வாய்ப்பாடு பகுதியை தங்குதடையின்றி மனப்பாடம் செய்ய பயிற்சியளிக்க வேண்டும். வகுப்பறையில் ஆசிரியர்கள் நடத்தும் பாடப் பயிற்சிகள் மட்டும் போதும் என நினைக்க கூடாது. பாடப்பிரிவுகள் தவிர்த்து இதுபோன்ற பொதுவான பயிற்சிகளை அவர்களுக்கு தினமும் பெற்றோர்கள் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.