WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 18, 2015

மதிய உணவை ருசிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு

மதிய உணவின் தரம் குறித்து, ஆசிரியர்கள் ருசி பார்த்து, பதிவேட்டில்
குறிப்பிட வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மதிய உணவு வழங்கப்படுகிறது. தரமான, பாதுகாப்பான உணவு குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில், புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, பள்ளி சமையல் கூடங்கள் சுத்தமான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். சமையல் பொருட்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும். சமையல் செய்யும் ஊழியர் மற்றும் சமையல் உதவியாளர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். ஆண்டுக்கு இருமுறை அவர்களது உடல் நலம் குறித்து பரிசோதனை செய்ய வேண்டும். சூடான நிலையில் மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்க வேண்டும்.

பள்ளி ஆசிரியர் ஒருவர், நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவர் என, சுழற்சி முறையில் தினமும் 2 பேர் மதிய உணவை ருசித்து பார்த்து, உணவு தரத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னரே, மாணவர்களுக்கு மதிய உணவை பரிமாற வேண்டும். இது குறித்து பதிவேட்டிலும், குறிப்பிட வேண்டும். அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு, அவ்வப்போது மதிய உணவு மாதிரிகளை அனுப்பி, தரம் குறித்த அறிக்கையை பெற, அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநில அரசு தலைமை செயலாளர்கள், மதிய உணவு திட்ட செயலாளர்களுக்கு, இது குறித்த உத்தரவுகளை மத்திய அரசு அனுப்பி, அதை நடைமுறைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.