WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 13, 2015

தமிழ்நாட்டுக்கு ஏதும் இல்லை:18 புதிய உயர் கல்வி நிலையங்களில் ஆந்திராவில் 7 நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவு


புதுடெல்லி: நாடு முழுவதும் புதிதாக 18 உயர் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவற்றில் ஆந்திராவில் மட்டும் 7 கல்வி நிறுவனங்கள் அமைய உள்ளன. இந்த அறிவிப்பில் தமிழ் நாட்டுக்கு எந்தவொரு உயர் கல்வி நிறுவனமும் ஒதுக்கப்படவில்லை. மக்களவையில், நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்படவுள்ள உயர் கல்வி நிறுவனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதன்படி, நாட்டின் 11 மாநிலங்களில் மொத்தம் 18 உயர் கல்வி நிறுவனங்களை திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவற்றில், ஆந்திராவில் மட்டும் 7 உயர் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட உள்ளது. விசாகப்பட்டினத்தில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்), திருப்பதியில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் (ஐஐஎஸ்இஆர்), ஐஐடி, மற்றும் ஐஐஐடி, என்.ஐ.டி, மத்திய பல்கலை., பழங்குடியின பல்கலை. ஆகிய உயர் கல்வி நிறுவனங்களை திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதேபோன்று, பீகார், ஒடிசா, மகாராஷ்டிரா (நாக்பூர்), பஞ்சாப் (அமிருதசரஸ்), இமாச்சலப் பிரதேசம், ஆகிய இடங்களில் ஐஐஎம் உயர் கல்வி நிலையமும், கேரளா (பாலக்காடு), சட்டிஸ்கர், கோவா, ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்க ளில் ஐஐடியும் அமைக்கப்பட உள்ளது. தெலங்கானாவில் பழங்குடியின பல்கலைக் கழகம் ஒன்றும், மத்தியப் பிரதேசத்தில் ஜனதா கட்சியை தோற்றுவித்த ஜெய் பிரகாஷ் நாராயண் பெயரில் உயர்கல்வி நிறுவனம் ஒன்றையும் திறப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு கல்வி நிறுவனமும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.