WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 10, 2015

பிளஸ் 2 தேர்வில் முறைகேடு: 36 பேர் பிடிபட்டனர்.

பிளஸ் 2 ஆங்கிலம், முதல் தாள் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்ட 36 பேர் பிடிபட்டனர். இதில், பள்ளி மாணவர்கள், 12 பேர்.
அதேநேரம், ஆங்கிலம் முதல் தாள் ஆங்கில வழி மாணவர்களுக்கு எளிமையாகவும், தமிழ் வழி மாணவர்களுக்கு கொஞ்சம் கடினமாகவும் இருந்தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வில், நேற்று, ஆங்கிலம் முதல் தாளுக்கு தேர்வு நடந்தது. ஏழு பக்கங்கள் அடங்கிய வினாத்தாளில், மொத்தம், 100 மதிப்பெண்களுக்கு, ஆப்ஷனல் வினா உட்பட மொத்தம் 69 கேள்விகள் இருந்தன. முதல் தாளில், பெரும்பாலானவை ஆங்கில இலக்கணம் தொடர்பான கேள்விகள். நூறு வார்த்தைகளுக்கு, ஒரு பத்தி எழுதும் திறன் குறித்த வினாவில், சத்தியாகிரகப் போராட்டத்தில் பெண்களை காந்திஜி எந்த அளவுக்கு ஈடுபடுத்தினார்? என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது.

வினாத்தாள் குறித்து மாணவ, மாணவியர் கூறியதாவது: ஆங்கிலக் கவிதை குறித்த வினா, இலக்கணம் தொடர்பான வினாக்கள், தமிழ் வழி மாணவ, மாணவியருக்கு கடினமாக இருந்தன; ஆங்கில வழி மாணவ, மாணவியருக்கு எளிதாக இருந்தன. மொழி மாற்றம் குறித்த வினா, அனைவருக்கும் எளிமையாக இருந்தது. இவ்வாறு கூறினர்.

நேற்று, தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, 36 தேர்வர்கள் சிக்கினர். அதில், 12 பேர் பள்ளி மாணவர்கள்; மற்றவர்கள் தனித்தேர்வர்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.