WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, March 23, 2015

முதுநிலை ஆசிரியர் பணி28ம் தேதி முதல் 'கவுன்சிலிங்'

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,789 பணியிடங்களை நிரப்ப, 'ஆன் - லைன் கவுன்சிலிங்,' வரும் 28ம் தேதி நடக்கிறது.

போட்டி தேர்வு:

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தேர்வான, 1,789 பேருக்கு பணி நியமனம் வழங்குவதற்கான, 'ஆன் - லைன் கவுன்சிலிங்,' வரும் 28ம் தேதி, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கிறது.

டி.ஆர்.பி.,யின் வரிசை எண் படி கவுன்சிலிங் நடக்கும். முதலில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும், பின், வேறு மாவட்டத்தில் இருந்து, அந்த மாவட்டத் தில் பணிபுரிய விரும்புவோருக்கும் கலந்தாய்வு நடக்கும்.

சான்றிதழ்களுடன்...:

தேர்வானவர்கள், ஹால் டிக்கெட் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன், விண்ணப்பத்தில் முகவரி குறிப்பிட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு, காலை 9:30 மணிக்கு வர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.