WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 28, 2015

இயற்பியலில் சில கேள்விகள் தவறாகவும், பிழையாகவும் கேட்கப்பட்டதால் குழப்பம்.

நேற்று நடந்த பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் சில கேள்விகள் தவறாகவும், சில கேள்விகள் பிழையாகவும் கேட்கப்பட்டதால் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.

பி டைப் வினாத்தாளில் ஒரு மதிப்பெண்ணில் 14 வது கேள்வியில், 400 ஆம்ஸ்ட்ராங் அலைநீளமுள்ள ஒரு ஒளியானது 2 மைக்ரோ மீட்டர் தொலைவு கடந்த பிறகு உருவாக்கம் கட்ட வேறுபாடு என கேட்கப்பட்டது. இது புத்தக பயிற்சி கேள்வியில் இருந்து கேட்கப்பட்டாலும் தேவையான தகவல்கள் கொடுக்கப்படவில்லை.

அதேபோல் 3 மதிப்பெண்ணில் 31 வது கேள்வியில் நிலை மின்னியலில் கூலோம் விதியை கூறுக என கேட்கப்பட்டது. இதில் கூலும் என்பதற்கு பதிலாக கூலோம் என உள்ளது. 35 வது கேள்வியில் மீக கடத்திகளின் பயன்களில் எவையேனும் மூன்றினை எழுதுக என கேட்கப்பட்டது. இதில் மீ என்பதற்கு பதிலாக மீக என உள்ளது. இயற்பியல் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "ஒரு மதிப்பெண்ணில் 23, 24, 26, 30 வது கேள்விகளும் நேரடியாக கேட்கப்படவில்லை. தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் தர வேண்டும்,” என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.