WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, March 14, 2015

பிளஸ் டூ தேர்வுகளை கண்காணிக்க அண்ணா பல்கலை. பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள்

பிளஸ் டூ கணிதம் உள்பட முக்கிய பாடத் தேர்வுகள் வரும் 18-ம் தேதி தொடங்க இருக்கின்றன. இத்தேர்வுகளை கண்காணிக்க அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் 33 பேர் தலைமை யில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ் டூ தேர்வு கடந்த 5-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மொழிப் பாடங்கள் உள்ளிட்ட தேர்வுகள் முடிந்திருக்கின்றன. பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளுக்கான கணிதம், விலங்கியல் தேர்வுகள் 18-ம் தேதியும் வேதியியல் தேர்வு 20-ம் தேதியும், இயற்பியல் தேர்வு 27-ம் தேதியும், உயிரியல், தாவரவியல் தேர்வுகள் 31-ம் தேதி அன்றும் நடைபெற உள்ளன. ஏற்கெனவே, தேர்வு மையங் களில் காப்பி அடிப்பது, பிட் அடித்தல் உள்ளிட்ட முறைகேடு களை தடுக்க மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன. இவை தவிர, வருவாய்த்துறையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொள்கிறார்கள். கணிதம், இயற்பியல்,வேதியியல், தாவர வியல், விலங்கியல் ஆகிய தேர்வுகளுக்கு கண்காணிப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் அண்ணா பல்கலைக்கழக மூத்த பேராசிரியர்கள் தலைமையில் சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 33 பேராசிரியர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் எஸ்.கணேசன் தெரிவித்தார். இவர்களில் 3 பேர் சென்னை மாவட்டத்திலும், எஞ்சிய 30 பேர் தமிழ்நாட்டின் இதர மாவட்டங்களிலும் பணியில் ஈடுபடுவார்கள். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் தனியாக சென்று திடீர் ஆய்வு மேற்கொள்வர். தேவைப்பட்டால் கல்வித்துறை அதிகாரிகளுடன் இணைந்தும் சோதனை நடவடிக் கைகளில் ஈடுபடுவர் என்றும் பதிவாளர் கணேசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.