அனுமதியின்றி சுற்றுலா செல்லக் கூடாது. நீர்நிலைகள் உள்ள இடங்களுக்கு
மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லக்கூடாது. சுற்றுலா செல்லும்முன், பெற்றோர்களின் முன் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கல்விச் சுற்றுலா செல்லும் முன், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம், கண்டிப்பாக உரிய முன்அனுமதி பெற வேண்டும்.
அனுமதியின்றி சுற்றுலா செல்லக் கூடாது. நீர்நிலைகள் உள்ள இடங்களுக்கு மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லக்கூடாது. சுற்றுலா செல்லும் முன், பெற்றோர்களின் முன் அனுமதியை கண்டிப்பாக பெற வேண்டும். பெற்றோர்களிடம் கையொப்பம் இட்ட ஒப்புதல் பெற வேண்டும்.
பாதுகாப்பில்லாத சுற்றுலாவில், குழந்தைகளுக்கு ஏதாவது விபரீதம் ஏற்படுவதால் பள்ளியை மட்டுமின்றி, ஒட்டு மொத்தமாக கல்வித் துறையையும் பாதிக்கிறது. எனவே, பாதுகாப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் இதுகுறித்த அறிவுரையை, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.