WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, March 30, 2015

அஞ்சல்வழி பி.எட்., படிப்புக்கு சிறப்பு அனுமதி தர உத்தரவு

பல்வேறு பல்கலையில், அஞ்சல் வழியாக பி.எட்., படிப்பு படிக்கும் இடைநிலை மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கு, சிறப்பு அனுமதியாக, அந்தந்த பள்ளியிலேயே கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஊராட்சி, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலையாசிரியர், சிறப்பு ஆசிரியர்கள் அஞ்சல் வழிக்கல்வி மூலமாக, பல்வேறு பல்கலையில் பி.எட்., படிப்பு படித்து வருகின்றனர். இதற்காக அவர்கள், வெவ்வேறு பள்ளிகளை தேர்வு செய்து கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளும் போது, பணியாற்றும் பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது.இதனால், துவக்கப்பள்ளி அளவில் ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளி மாணவர்கள், கல்வி கற்பிப்பதில் பெரும் பின்னடைவை சந்திக்கின்றனர். அதேபோல், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், பி.எட்., படிப்பு அஞ்சல் வழி படிக்கும் ஆசிரியர்களால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. இதனை தடுக்க மாற்றுத்திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள துவக்க, நடுநிலை, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்கள், பல்வேறு பல்கலை யில் பி.எட்., படிப்பு படித்து வந்தால், அவர்கள் கற்பித்தல் பயிற்சியை, அவரவர் பணியாற்றும் பள்ளியில் மேற்கொள்ளலாம் என, உத்தரவிடப்பட்டுள்ளது.அரசின் இந்த சிறப்பு அனுமதி உத்தரவால், தொடக்கக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள துவக்க, நகராட்சி, உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை, சிறப்பு ஆசிரியர்கள், 6, 7, 8ம் வகுப்புக்கு, அந்தந்த பள்ளியில் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்.மேலும், "ஒன்றிய, நகராட்சி, உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில், பி.எட்., படிப்பு அஞ்சல்வழி படிப்பவர்கள், அந்தந்த பல்கலை., அனுமதிக்கும் பள்ளியில், கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.