குறைந்தபட்ச மாத பென்ஷன், 1,000 ரூபாய்' என, கடந்த ஆண்டில் நிர்ணயித்த மத்திய அரசு, அதைத் தொடருமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், 'கால
வரையின்றி, குறைந்தபட்ச பென்ஷன், 1,000 ரூபாயாக தொடரும்' என, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று கூடிய,
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.குறைந்தபட்ச பென்ஷன் தொகையை, 1,000 ரூபாயாக நிர்ணயித்து, பிரதமர் மோடி அரசு, கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. இது, கடந்த மார்ச் 31ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. பென்ஷன் வழங்கி வந்த, இ.பி.எப்., நிறுவனத்திற்கு, மத்திய அரசிடம் இருந்து, அதை தொடர்வதற்கான உத்தரவு வராததால், ஏப்ரல் மாதம் பென்ஷனில் குளறுபடி ஏற்பட்டது.இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் கூடிய, மத்திய அமைச்சரவை கூட்டத்தில், குறைந்தபட்ச பென்ஷனாக, 1,000 ரூபாயை காலவரையின்றி தொடர்வது என, முடிவு செய்யப்பட்டது. இதனால், மத்திய அரசுக்கு, ஆண்டுக்கு, 850 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். 20 லட்சம் பென்ஷன்தாரர்கள் பயன் பெறுவர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.