WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 29, 2015

11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 132 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவது தொடர்பாக, தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் புனித வளானார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ம.க.செ.சுபாஷினி தலைமை வகித்தார். அப்போது அவர் தெரிவித்தது: 11ஆம் வகுப்பு மாணவர்களின் இறுதித் தேர்வு முடிவுகளை மட்டுமே கருத்தில் கொண்டு, தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். முன்அனுமதியுடன், மருத்துவச் சான்றிதழ் வழங்காமல் நீண்ட நாள் விடுப்பு எடுத்த மாணவர்களையும், இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களையும் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்க தேவையில்லை என்றார். அதன் அடிப்படையில், திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 82 மேல்நிலைப் பள்ளிகள், பழனி கல்வி மாவட்டத்தில் 50 பள்ளிகள் என மொத்தமுள்ள 132 பள்ளிகளைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகளை புதன்கிழமை(ஏப்.29) அந்தந்த பள்ளிகளில் தெரிந்து கொள்ளலாம் என கல்வித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.