WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 4, 2015

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு:14 சதவீத ஆசிரியர்கள் தேர்ச்சி

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வின்
(CTET-2015)முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி 18ம் தேதி 988 மையங்களில் 96 நகரங்களில் CTET-2015  தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை மொத்தம் 6.77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். இதில் 13.53 சதவீதம் பேர்  தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்ச்சியடைந்தவர்களின் விகிதம், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. சிடிஇடி தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் மத்திய அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டு வரை உள்ள வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.