WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 15, 2015

உதவி பேராசிரியர் பணிக்கு ஜூன் 28ல் ‘நெட்’ தகுதி தேர்வு

அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேர யுஜிசி நடத்தும் ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பரில் நெட் தகுதித் தேர்வு நடத்தப்படும். இதுவரை யுஜிசி நடத்தி வந்த இந்தத் தேர்வை கடந்த முறை சிபிஎஸ்இ ்) நடத்தியது. இதேபோல இந்த முறையயும் யுஜிசி சார்பில் சிபிஎஸ்இ நெட் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

நெட் தகுதித் தேர்வு பொருளாதாரம், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், மானுடவியல், கல்வியியல், தமிழ், கன்னடம், மலையாளம், பஞ்சாபி, ஒடியா, சமஸ்கிருதம் உட்பட 84 பாடங்களுக்கு ஜூன் 28ம் தேதி நடத்தப்படுகிறது. இந்த பாடங்களில் முதுநிலை பட்டப் படிப்பில் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் நெட் தகுதித் தேர்வு எழுதலாம். தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் தேர்வு எழுதலாம். இந்தத் தேர்வுக்கு ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். நாளை (16ம் தேதி) முதல்www.cbse.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 15ம் தேதி தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.