பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை திட்டமிட்டபடி 16ம் தேதிக்குள் முடிக்க
கல்வித்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்தமாதம் 31ம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. மொழிப்பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் முதல் வாரத்தில் முடிந்தது. பிற பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் வீடியோ கேமரா மூலம் பணிகள் கண்காணிக்கப்படுகிறது. மேலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேரடி கண்காணிப்பில் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. தற்போது 50 முதல் 65 சதவீத விடைத்தாள்கள் திருத்தப்பட்டு விட்டன. முக்கிய பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
மே முதல் வாரத்தில் ரிசல்ட் வெளியிட கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதைக்கருத்தில் கொண்டு சில மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். எனவே 16ம் தேதிக்குள் விடைத்தாள்கள் திருத்தும் பணி முழுமையாக நிறைவடையும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து 20ம் தேதி முதல் 10ம் வகுப்பிற்கான விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. 75 ஆயிரம் மையங்களில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் இப்பணியை செய்ய உள்ளனர். இம்மாத இறுதிக்குள் 10ம் வகுப்பு விடைத்தாள்களையும் திருத்தி முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் உரிய ஏற்பாடுகளை மாவட்ட கல்வி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.