WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 2, 2015

கணினிப் பயிற்றுநர்களுக்கு ஏப். 4-இல் பணி நியமனக் கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினிப் பயிற்றுநர்களுக்கு சனிக்கிழமை (ஏப். 4) பணி நியமனக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினிப் பயிற்றுநர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கான ஆன்லைன் கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்கள் முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.

கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக வருகை தர வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், அசல் கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுடன் அன்றைய தினம் காலை 9 மணிக்கு வந்து கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.