WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 25, 2015

பணப் பட்டுவாடா தாமதம்:ஆசிரியர்கள் கடும் அதிருப்தி.

அரசு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தியதற்கான ஊதியம் வழங்குவதில்
தாமதம் ஏற்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் அதிருப்தியடைந்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டது. இங்கு, விடைத்தாள்கள் திருத்தும் பணியில் நேற்று, 196 ஆசிரியர்கள் பங்கேற்றனர். நேற்று மதியம் 2:30 மணியளவில், கணக்கு பாடம் விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்ததும், பயணப்படி, விடைத்தாள் திருத்தியதற்கான சம்பளத்திற்காக, ஆசிரியர்கள் காத்திருந்தனர். இரவு 7:30 மணி வரை, தொகை வழங்கப்படாததால் ஆசிரியர்கள் ஆவேசமடைந்து, அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து, இரவு 8 மணிக்கு, ஆசிரியர்களுக்கு தொகை வழங்கப் பட்டது. இச்சம்பவத்தால் விடைத்தாள் திருத்தும் மையத்தில், திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.