WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 1, 2015

கூட்டுறவு சங்க உதவியாளர் பணி: தேர்வானோர் பட்டியல் வெளியீடு.

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,589
உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோர் குறித்த விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.



இதுகுறித்து மாநில ஆள் சேர்ப்பு நிலையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள 3,589 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய இரண்டிலும் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்கள் கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

எழுத்து, நேர்முகத்தேர்வு ஆகியவற்றில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மொத்த மதிப்பெண் அடிப்படையிலும் வகுப்பு வாரி சுழற்சிமுறை அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்டம், கூட்டுறவு சங்கங்களின் விவரங்கள் மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளத்தில் www.tncoopsrb.in வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பான எழுத்து மூல உத்தரவுகள் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள், விண்ணப்பதாரர்களுக்கு தனியே அனுப்பி வைக்கப்படும் என மாநில ஆள்சேர்ப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.