திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களுக்குத் தேவையான ஜாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்களை தேர்வு முடிவுகள் வருவதற்குள்ளாகவே வாங்கிப் பயன்பெறலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் மக்கள் கணினி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களுக்குத் தேவையான ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரிச் சான்றிதழ் ஆகியவற்றை முன்கூட்டியே விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். இப்போது எழுதியுள்ள தேர்வுகளின் முடிவுகள் வெளிவருவதற்குள் தங்களுக்குத் தேவையான சான்றுகளைப் பெற்றுக் கொள்வது எளிது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், கூட்டுறவு மையங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பொது இ-சேவை மையங்களிலும் மாணவர்கள் மனு செய்து சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.