WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 16, 2015

அரசு அச்சக பணிக்கு விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு: எழுதுபொருள் அச்சகத்துறை உத்தரவு.

தமிழகத்தில் உள்ள அரசு அச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு
விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதுடன் வயது வரம்பும் தளர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு எழுதுபொருள் அச்சகத்துறை வெளியிட்ட அறிவிப்பு: எழுதுபொருள் அச்சகத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் அரசு அச்சகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அச்சகங்களில் மெஷின் மைண்டர், ஜூனியர் புக் பைண்டர் ஆகிய தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இப்பணியிடங்களுக்கான கல்வி, வயது உள்ளிட்ட தகுதிகள் குறித்த விவரங்கள் விண்ணப்பப் படிவம் இணைப்புகள் குறித்த தகவல்கள் தமிழக அரசு இணை யதளத்தில் ‘tn.gov.in’ வெளியிடப் பட்டது. இப்பணியிடங்களுக்கு இம்மாதம் 17-ம் தேதி மாலை 5:30 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப் பிப்பதற்கான காலக்கெடுவை 24-ம் தேதி வரை நீட்டித்தும் பணிகளில் சேருவதற்கான வயது வரம்பை தளர்த்தியும் எழுது பொருள் அச்சகத்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.