WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, April 18, 2015

சத்துணவு சமையல் செய்ய மாட்டோம்: கலை ஆசிரியர்கள் போர்க்கொடி.

கல்விப் பணிகளைத் தான் செய்வோம்; சத்துணவு சமையல் மற்றும் உணவு
பரிமாறும் பணிகளை செய்ய மாட்டோம்' என, கலை ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:சத்துணவு ஊழியர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். பல பள்ளிகளில் சமையற்கூட பூட்டை உடைத்து, ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி, சத்துணவு சமைக்கும் பணியில் ஈடுபடுத்துகின்றனர். இதைக் கண்டிக்கிறோம். ஏற்கனவே, அரசின் நலத்திட்ட பணிகளுக்காகவும், இலவச பொருட்கள் வழங்குவதற்காகவும், கணக்கெடுப்புப் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது சத்துணவுப் பணியும் கூடுதல் சுமையாக உள்ளது. எனவே, மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தரும் பணிக்கு மட்டும், ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.