இந்தியாவில் ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்வியை
விரிவுப்படுத்தினால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 700 பல்கலைக்கழகங்கள், 36,000 கல்லூரிகள் செயல்பட்டு
வருகின்றன. உலகில் சிறந்த 200 கல்வி நிறுவனங்களில் இந்திய கல்வி
நிறுவனங்கள் 200-வது இடத்தை பெற்றுள்ளது வேதனை அளிக்கின்றது. மாணவர்களின்
ஆராய்ச்சி மற்றும் கண்டுப்பிடிப்புகளுக்கு இந்தியாவில் ஊக்கம் அளிக்க
வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இளைய தலைமுறையினருக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டுமென்றால்,
நாட்டில் உயர்கல்வியை விரிவுப்படுத்துவது அவசியம் என்று புது தில்லியில்
உரையாற்றிய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.