WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 14, 2015

உதவி வேளாண் அலுவலர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் கோரி வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்?

மதுரை கே.புதூரைச் சேர்ந்தவர் ஏ.பாலகிருஷ்ணன், உயர் நீதிமன்ற மதுரை
கிளையில் தாக்கல் செய்தமனு: தமிழகத்தில் உதவி வேளாண்மை அலுவலர் பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆள்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், உதவி வேளாண்மை அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 417 வேளாண் உதவி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தொடர்பாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 30.1.2015 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது. அதில் வேதியியல், இயற்பியலில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு தனி வெயிட்டேஜ் மதிப்பெண் சலுகை வழங்குவது தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை. இது நியாயமற்றது. எனவே, வேலைவாய்ப்பு பதிவு மூப்புக்கு தனி வெயிட்டேஜ் மதிப்பெண் சலுகை வழங்கி நியமனங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்த பின், உதவி வேளாண் அலுவலர் பணி நியமனங்கள் அனைத்தும், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்படும் என உத்தரவிட்டார். பதில் மனு தாக்கல் செய்ய வேளாண்மைத் துறை செயலாளர், இயக்குநர் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.