WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, April 17, 2015

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு.

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்) விண்ணப்பிக்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் ஏப்ரல் 25 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை -டான்செட்- நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. 2015-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 20 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னை மையத்தில் நேரடியாக பதிவு செய்ய ஏப்ரல் 22 கடைசி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் தேதியை பல்கலைக்கழகம் இப்போது நீட்டித்துள்ளது. அதன்படி, தேர்வுக்கு பதிவு செய்ய ஏப்ரல் 25 கடைசித் தேதியாகும். சென்னை மையத்தில் நேரடியாக பதிவு செய்ய ஏப்ரல் 29 கடைசித் தேதியாகும். இதுகுறித்த விவரங்களை www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணைய தளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.