ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதேபோல், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு, 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. முன், 107 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை, 113 சதவீதமாக, 2015 ஜன., 1ம் தேதி முதல் ரொக்கமாக வழங்க, அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவு, அரசு ஓய்வூதியதாரர்கள், அரசு உதவி பெறும், உள்ளாட்சி மன்ற கல்வி நிறுவனங்களின் ஓய்வூதியம் பெறும் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிகளின் ஏனைய ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் என, நிதித்துறை முதன்மை செயலர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.