WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, April 27, 2015

உதவிப் பேராசிரியர் நியமனத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்த வேண்டும்

உதவிப் பேராசிரியர் பணி நியமனத் தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் நடத்த வேண்டும் என நெட், ஸ்லெட் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சங்கத்தின் ஆலோசகர் சுவாமிநாதன், இணைச் செயலர் தங்க முனியாண்டி ஆகியோர் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:

அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கான தேர்வு முறை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விதிமுறைகளுக்கு எதிராகவும், வெளிப்படையாக இல்லாமலும் உள்ளது.

அதேநேரம் அண்மையில் டி.என்.பி.எஸ்.சி. அரசுக் கல்லூரிகளில் நூலகர் பணியிடங்களை நிரப்பியபோது, யுஜிசி விதிமுறைகள் முழுமையாக பின்பற்றியதோடு, தேர்வில் வெளிப்படைத் தன்மையும் இருந்தது.

மேலும் டி.ஆர்.பி. அமைப்பானது பள்ளி ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட அமைப்பாகும்.

எனவே, வரும் காலங்களில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கானத் தேர்வினை டி.என்.பி.எஸ்.சி. மூலமே நடத்த வேண்டும்.

அதோடு, விண்ணப்பதாரர்கள் உரிமை பறிக்கப்படுகின்றபோது நீதிமன்றங்களை நாடும் நிலை உருவாகிறது. அவ்வாறு நீதிமன்றத்தை நாடும் நபர்கள் டிஆர்பி நேர்முகத் தேர்வுக்குச் செல்லும்போது, அந்த நபரின் பெயருக்கு எதிரே உள்ள குறிப்பில் "ஹெச்.சி.' (உயர் நீதிமன்றம்) என குறியீடு செய்கின்றனர். இவ்வாறு குறியீடு செய்யப்பட்டவர்களுக்கு நேர்முகத் தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதுபோன்ற நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்றனர்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.