WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, April 2, 2015

வேதியியல் தேர்வில் தவறான கேள்விகள்: உரிய மதிப்பெண் வழங்க உத்தரவு

பிளஸ் 2-க்கு 23ம் தேதி வேதியியல் பாடத் தேர்வு நடந்தது. அதில் ஏ வகை கேள்வித்தாளில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 10, 22வது கேள்விகள் பிழையாக கேட்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக 10வது கேள்வியில் யுரேனியம் அணுத்துகள், ஈயத்துடன் வேதியியல் வினைபுரியும்போது வெளியாகும் ஆல்பா, பீட்டா கதிர்கள் எண்ணிக்கை தொடர்பாக கேட்கப்பட்டு இருந் தது. அதில் ஈயத்தின் மதிப்பு 206 என்பதற்கு பதிலாக 108 என்று குறிப்பிடப் பட்டு இருந்தது. அதனால் அந்த கேள்வியின் விடைக்கு சரியான கணக்கீடு கிடைக்காமல் மாணவர்கள் திணறினர். 

அதேபோல 22வது கேள்வியில் வெப்ப இயக்கவியல் தொடர்பாக கொடுக்கப்பட்ட விடையில் 0.032 என்று கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கொடுக்கப்பட்ட 4 விடைகளும் தவறாக கொடுக்கப்பட்டு இருந்தன. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது. வேதியியல் பாடத்தின் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை தற்போது ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 10, 22வது கேள்விகளுக்கு விடை எழுத முற்பட்டுள்ள மாணவர்களுக்கு அந்த கேள்விகளுக்கு உரிய மதிப்பெண்களை வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.