டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 25 ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உடனுக்குடன் ஹால்டிக்கெட் பெற்றுச்செல்ல, அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதுகலை இன்ஜி., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய படிப்புகளுக்கு, பொது நுழைவுத்தேர்வான டான்செட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், தடாகம் ரோட்டிலுள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் வழங்கப்பட்டு வருகிறது.
வரும் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்களின் நலன்கருதி வரும் 25ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும், www.annauniv.edu/tancet2015 எனும் இணையதளத்தில், ஆன்லைன் மூலமும் இவ்வாண்டு விண்ணப்பிக்கலாம் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது; ஞாயிற்றுக்கிழமைகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டான்செட் விண்ணப்ப வினியோக பொறுப்பாளர் பேராசிரியர் குமார் கூறுகையில், "டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 25ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து வழங்கியவுடன், உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு புகைப்படத்துடன்கூடிய ஹால்டிக்கெட் பெற்றுச் செல்லலாம். ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பவர்களுக்கு, பல்கலையிலிருந்து ஹால்டிக்கெட் அனுப்பி வைக்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.