WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, April 24, 2015

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது? இரண்டே நிமிடத்தில் கண்டுபிடிக்கும் கூகுள்!!

சூழ்நிலைக்கு தக்கபடி மனிதர்களை சிலர் நாய், நரி, சிங்கம் என்று
அழைத்தாலும், உண்மையில் நீங்கள் என்ன மாதிரியான மிருகம் என்று உங்களுக்குத் தெரியுமா?. முக்காலமும் உணர்ந்த ’கூகுள்’ ஆண்டவருக்கு அது தெரியும். அதை நீங்களும் தெரிந்து கொள்ள கூகுளின் சில உளவியல் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கூகுள் வலைதளத்திற்குச் சென்று earth day quiz என்று டைப் செய்தால் உங்களுக்கு முன்னால் வெள்ளிக்கிழமை ராத்திரி எங்கு இருப்பீர்கள் என்று ஒரு கேள்வியும் கீழே பதிலாக 4 புகைப்படங்களும் இணைக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.   உங்களுக்கு பிடித்த உணவு வகை, வரப்போகும் லைப் பார்ட்னர் எப்படி இருக்க வேண்டும், என்று கூகுள் கேட்கும் 5 கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்த அடுத்த நொடியே நீங்கள் என்ன மாதிரியான மிருகம் என்று தெரிய வந்து விடும். ஒரு வேளை கூகுள் போங்காட்டம் ஆடினால்?.... சிம்பிள், மறுபடியும் இன்னொரு முறை எர்த் குவிஸ்-இல் கலந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.